Thursday, 10 November 2016

Civil Services Exam Strategy Book in Tamil- Book Review

Latest Civil Services Exam Strategy Book- written by V.Palanichamy- Book Review by Dinamani.com  online 

http://www.dinamani.com/specials/nool-aragam/2016/nov/09/ 

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி: நூல் விமரிசனம்

கல்லுரி முடித்த பிறகோ, பணி செய்தபடியோ தமக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை குடிமைப்பணி தேர்வுகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள அவர்கள் தயங்குவதில்லை. கௌரவமான, மதிப்புமிக்க அரசுப் பணி என்பதோடு ஏதோ ஒரு வகையில் மக்களுக்காகப் பணியாற்றவும் இத்தகைய தேர்வுகள் வாய்ப்பாக அமைகின்றன.

இத்தேர்வினை எதிர்கொள்ள உதவும் பயிற்சி நிலையங்களும் இன்று பெருகி விட்டன. இணையதளத்திலும் இது குறித்த ஏராளமான தகவல்களை நாம் பெற முடியும். எனினும், இத்தேர்வினை எதிர்கொள்ள விரும்பும் மாணவர்களின் மனதில் எழும் ஏராளமான ஐயப்பாடுகளுக்கும்;, வினாக்களுக்கும் மிகத் தெளிவான விடையை அளிக்கும் வகையில் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் தன்னம்பிக்கையோடு இன்று இத்தேர்வினை எதிர்கொள்வதற்கு வலுசேர்க்கும் வகையில் திரு வை. பழனிச்சாமி அவர்கள், இந்தப் புத்தகத்தை அற்புதமாக வடிவமைத்து வெளியிட்டிருப்பது சிறப்பு.    
குடிமைப்பணிக்காக விண்ணப்பித்து அதில் தேர்வு பெறுவது மற்றும் நேர்காணலை எதிர்கொள்ளும் விதம் ஆகியவை குறித்த அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 28 தலைப்புகளில் குடிமைப்பணித் தேர்வு குறித்த அனைத்து அம்சங்களையும் இந்நூல் அலசுகிறது.

இந்திய குடிமைப்பணியின் கீழ் 24 பணி பிhpவுகளுக்காக நடத்தப்படும் இத்தேர்வினை எந்தெந்த வகையில் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதற்கு முக்கியமான உத்திகளையும் வழிமுறைகளையும் நூலாசிரியர் மிக தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியிருக்கிறார்.

தேர்வுக்குத் தயார் செய்பவர்கள் செய்தித்தாள்களை எந்தெந்த முறையில் படிக்க  வேண்டும் என்பது பற்றி விளக்கும் பகுதி  மிக முக்கியமானது. இந்தத்தேர்வு குறித்து அனைத்து விபரங்களையும் கேள்வி – பதில் மூலம் ஆசிரியர் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறார்.  

இந்த கேள்வி-பதில் உத்தி நோpல் உரையாடுவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது எனலாம்.
    குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற சிலரின் அனுபவங்கள் இப்புத்தகத்தில்  தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், இத்தேர்வு எழுத விழையும் மாணவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பது திண்ணம்.  
தேர்வு குறித்த அட்டவணை, புத்தகப் பரிந்துரை, பணி குறித்த விவரங்கள் எனப் பல்வேறு அங்கங்களும் மிகுந்த சிரத்தையோடு திரட்டப்பட்டு ஒரு தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவர்கள், தொழில்துறையினர் மற்றும் உயர்பதவிகளுக்கு செல்ல விரும்பும் அனைவருக்கும் பயன் அளிக்கும் 
வகையில் மிக நேர்த்தியாக இந்த புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார் இந்நூலாசியர்.
இந்த கையேடு வாழ்வில் ஏற்றம் பெற விரும்புவோருக்கும் மக்கள் பணி ஆற்றவும், உயர் பதவிக்கான லட்சியங்கள் உடைய அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடியது. 
அனைவரது வீட்டின் படிக்கும் அறையிலும், பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களிலும் இந்த நூலை கண்டிப்பாக  இடம் பெற செய்ய பெற்றேhர்களும், ஆசிரியர்களும் முனைய வேண்டும்.
தனிப்பயிற்சி நிலையங்களில் இணைந்து இத்தேர்வினை எதிர்கொள்ள முடியாத நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்,

குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த புத்தகம்  தகவல்களுடன் கூடிய முக்கிய கையேடாக திகழ்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 24 துறைகளை சார்ந்த குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கான அனைத்து அம்சங்களையும் இந்த புத்தகம் அலசுகிறது என்றhல் அது மிகையல்ல.

மேலும் இப்புத்தகத்தில்  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ண்பபதாhpன் தகுதி, பிழையில்லாமல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறை, தேர்வு முறை, தேர்வுகளுக்கு தயார் செய்யும் உத்தி, படித்து அறிய வேண்டிய பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியமான புத்தகங்கள், தேர்வு எழுதும் போது 
கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்பன போன்ற பல்வேறு அடிப்படை தகவல்கள் முதற்கொண்டு முக்கியமான தகவல்கள் வரை அனைத்தையும் விhpவான முறையில் விளக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது.

குடிமைப்பணித் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவ நினைக்கும் பெற்றோர் மற்றும் ஆசிhpயர்களுக்கும் பயன்படும் வகையில் இந்நூல் அமைந்திருப்பது அதன் சிறப்பு அம்சத்தை பறைசாற்றுவதாக திகழ்கிறது. 
தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களும் தமிழில் தேர்வை எதிர் விரும்புவர்களும் இத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற முடியுமா? என்ற மாணவர்களின் உள்ளத்தை வாட்டி வதைக்கும் வினாவிற்குக் கூட தௌpவான விடையை இந்த புத்தகம் அளிக்கிறது.

தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் உண்மையான உழைப்பும் தௌpவான வழிமுறையில் பயிற்சியும் இருந்தால் எவரும் இந்த தேர்வில் வெற்றி பெற்று உயர்நிலை அடைய முடியும் என்பதை ஆசிரியர் திரு வை பழனிச்சாமி இந்த புத்தகத்தில் மீண்டும், மீண்டும் எடுத்துரைக்கிறார்.

இந்த குடிமைப் பணி தேர்வில் வெற்றிப் பெற்று இந்திய தகவல் பணியில் (ஐஐஎஸ்) அகில இந்திய வானொலியின் சென்னை நிலைய செய்திப்பிரிவு இயக்குநராக பணியாற்றி வரும் இந்நூலாசிரியர் திரு. பழனிச்சாமி அவர்கள் தனது அனுபவங்களின் பிரத்யேக தொகுப்பாக மிகுந்த பிரயாசைவுடன் வடிவமைத்து வழங்கியுள்ளார்.  எனவே இது தகவல்களின் திரட்சி மட்டுமல்ல, அனுபவங்களின் சாறு என்றும் கூறலாம், 
ஆசிரியர்:  வை. பழனிச்சாமி ஐ.ஐ.எஸ்
வெளியீடு  கீதாசாமி பப்ளிசர்ஸ்
பிளாட் எண் 34, விவேகானந்தர் தெரு,
பகுதி 2, எம்.ஜல் நகர், ஊரப்பாக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் - 603202
செல்போன் - 7358590269